நாடெங்கும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பதிவுச் செய்யப்பட்ட மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2020- ஆம் ஆண்டு 1 லட்சத்து 23 ஆயிரமாக இருந்த நிலையில், இது கடந்த 2021- ஆம் ஆண்டு 3 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2020- ஆம் ஆண்டு 5,974 மின்சார வாகனங்களும், 2021- ஆம் ஆண்டு 30,037 மின்சார வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் மின்சார வாகனங்களை வாங்குபவர்களையும், அதனை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கி ஊக்குவிப்பதாலும், மின்சார வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.