Skip to main content

மணிப்பூரில் நிலநடுக்கம்

Published on 04/08/2017 | Edited on 04/08/2017

மணிப்பூரில் நிலநடுக்கம்

மணிப்பூரில் நேற்று முன்தினம் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 11.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4ஆக பதிவானதாக புவியயில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளைவிட்டு வெளியேறினார்கள். சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள் சில மணி நேரத்துக்கு பின்னர் வீடுகளுக்கு திரும்பினார்கள். சூரசந்த்பூர் மாவட்டத்தை மையமாக வைத்து, பூமியில் 55 கி.மீ. ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்