Skip to main content

மேற்கு வங்கத்தில் இன்று நடந்த தேர்தலில் ஒருவர் கொல்லப்பட்டார்!

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

நாடு முழுவதும் மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் 116 மக்களவை தொகுதிளுக்கு இன்று நடைப்பெற்று வருகிறது. இதில் மேற்கு வங்கத்தில் சுமார் ஐந்து மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைப்பெற்று வருகிறது.  இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் காங்கிரஸ் கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே நடந்த மோதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

west bengal



இந்நிலையில் அந்த பகுதியில் மேலும் கலவரம் பரவுவதை தடுக்க துணை ராணுவப்படை விரைந்தது. இதனால் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் மக்கள் அமைதியாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் மதியம் மூன்று மணி வரை பதிவான வாக்குகளின் சதவீதம் 67.52 % ஆகும். மேலும் இன்னும் 2 மணி நேரத்தில் வாக்கு பதிவு முடியும் நிலையில் காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் நடந்துள்ளது அனைவருக்கும்  அதிர்ச்சி அளித்துள்ளது.


பி.சந்தோஷ், சேலம்.  

சார்ந்த செய்திகள்