Skip to main content

இந்து முஸ்லிம் காதலைப் பேசுகிறதா பத்மாவதி? இந்துத்துவவாதிகள் ஆவேசம்!

Published on 19/10/2017 | Edited on 19/10/2017
இந்து முஸ்லிம் காதலைப் பேசுகிறதா பத்மாவதி? இந்துத்துவவாதிகள் ஆவேசம்!

பாலிவுட் திரைப்படமான பத்மாவதியில் இந்து முஸ்லிம் காதலை வெளிப்படுத்தியிருப்பதாக வெளிவந்த தகவல்களை அடுத்து, இந்துத்துவவாதிகள் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் பத்மாவதி. இந்தப் படத்தை சஞ்சய் லீலா பன்சாலி என்ற இயக்குனர் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்தப்படத்தின் போஸ்டரை குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு மாலில் கரன் என்பவர் ரங்கோலி ஓவியம்போல வரைந்திருந்தார். அப்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷங்களுடன் உள்ளே நுழைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், அந்த ஓவியத்தை அழித்துவிட்டு அதை வரைந்த ஓவியரையும் தாக்கியுள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கரன், என் 48 மணிநேர உழைப்பை 100 பேர் கொண்ட மதகும்பல் வீணாக்கிவிட்டது என தெரிவித்திருந்தார். 

பத்மாவதி படத்தின் இயக்குனரை ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று தாக்கியுள்ளனர். படப்பிடிப்பிற்காக போடப்பட்டிருந்த செட்டையும் சிலர் தீவைத்து எரித்துள்ளனர். 

இந்தப் படத்தில் ராணி பத்மினிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே உள்ள காதல் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாக வெளிவந்த வதந்திகளைத் தொடர்ந்தே இதுமாதிரியான தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்ந்த செய்திகள்