Published on 08/09/2022 | Edited on 08/09/2022

இளைஞர் ஒருவர் தேசியக்கொடியை பயன்படுத்தி வாகனத்தைத் துடைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று காலை தனது வாகனத்தை எடுத்து அதனைச் சுத்தம் செய்ய முயன்றுள்ளார். அப்போது வாகனத்துக்கு அருகே இருந்த தேசியக் கொடியைப் பார்த்த அவர், அதனை எடுத்து மடமடவென்று வாகனத்தைத் துடைத்துள்ளார். அவர் இவ்வாறு செய்வதைப் பார்த்த அருகிலிருந்த ஒருவர் அதிர்ச்சியாகி இதனை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து டெல்லி போலீசார் அந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.