டெல்லியில் தொடரும் மலக்குழி மரணங்கள்!
இந்திய தலைநகர் டெல்லியில் பாதாளச்சாக்கடையைச் சுத்தம்செய்யச் சென்ற மூன்று துப்புரவுப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள நொய்டா பகுதியில் நேற்று மதியம் பாதாள சாக்கடை சுத்தம்செய்ய மூன்று ஆட்களை அரசு ஒப்பந்ததாரர் நியமித்துள்ளார். ராஜேஷ், விகாஸ் மற்றும் ரவீந்திரா ஆகிய மூவரும் மிகவும் குறுகலான அந்த பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்துள்ளனர். முதலில் உள்ளே சென்ற ராஜேஷ் விஷவாயு தாக்கி வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார். இவரை மீட்க முயன்ற மற்ற இருவரும் உள்ளே சிக்கியுள்ளனர். இம்மூவரும் விஷவாயு தாக்கி குழிக்குள் மயங்கிக் கிடந்துள்ளனர். தாமதமாக வந்த மீட்புப்படையினர் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும்போது, அவர்களது உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மலக்குழிகளுக்குள் சிக்கிய துப்புரவுப்பணியாளர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதைத் தடுப்பதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
- ச.ப.மதிவாணன்