
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் கரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. தினமும் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,720 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,129 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். அதே போன்று கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றில் இருந்து 29,557 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனா தொற்று தினந்தோறும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.