Published on 30/09/2021 | Edited on 30/09/2021

இந்தியாவில் கேரளாவில் தான் தினசரி கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மேலும் அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 1 லட்சத்து 44 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் குறைந்து வந்த தினசரி கரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த செவ்வாய்க் கிழமை 11,699 பேருக்கும், நேற்று 12,161 பேருக்கும் கரோனா உறுதியான நிலையில், இன்று கேரளாவில் 15,914 பேருக்கு கரோனா உறுதியானது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 122 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் கரோனா உறுதியாகும் சதவீதம் 15.32 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.