Skip to main content

கர்நாடகாவில் மேலும் 7,178 பேருக்கு கரோனா... தவிக்கும் பெங்களூரு!

Published on 08/08/2020 | Edited on 08/08/2020

 

hgj

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் தொற்று இருந்த வந்த கர்நாடகாவில் தற்போது கரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இன்று மட்டும் 7,178 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,72,102 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக 93 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூர் நகரில் மட்டும் அதிகப்படியான எண்ணிக்கையில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு வருகிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்