![corona cured cases count increased above active cases in india](http://image.nakkheeran.in/cdn/farfuture/dNK0949B8RA_E6LfSnFYsHmvDLY6HKW4CBKCFsJmm-U/1591783905/sites/default/files/inline-images/sdd_2.jpg)
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெறுபவர்களை விடக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இன்று (10/06/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,66,598- லிருந்து 2,76,583 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,466- லிருந்து 7,745 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதித்த 1,33,632 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,29,215- லிருந்து 1,35,206 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெறுபவர்களை விடக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை நோய் பாதிக்கப்பட்ட 48.99% நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.