Skip to main content

‘அசைவ உணவு வேண்டாம்’ - பள்ளியின் புதிய விதிமுறையால் சர்ச்சை!

Published on 10/08/2024 | Edited on 10/08/2024
Controversy due to the school's new rule in UP

உத்தரப் பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 132 பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த செய்தியில், குழந்தைகளுக்கு மதிய உணவாக இறைச்சி உணவை டிபன் பாக்ஸில் வைத்து அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

மேலும் அதில், காலையில் சமைத்து டிபன் பாக்ஸில் வைத்து கொடுக்கும் இறைச்சி உணவுகள், மதிய நேரத்திற்குள் அந்த உணவு கெட்டுபோய்விடும். இதனால், குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதனால், இத்தகைய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும், மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதால் அவர்கள் அனைவரும் செளகரியான சூழலை உணர்வதற்காக இது வலியுறுத்தப்படவுள்ளது எனப் பள்ளி நிர்வாகம் விளக்கமளித்தது. 

இத்தகைய நடைமுறைக்கு மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இறைச்சி உணவுகள் கொண்டு வரக்கூடாது என்று சொல்வதன் உள்நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து நொய்டா கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி நிர்வாகத்தின் புதிய விதிமுறையில் பெற்றோருக்கு ஆட்சேயபனம் இருந்தால், அவர்கள் நேரடியாக வந்து புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்