பீகார் அரசின் அதிகாரப்பூர்வக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மருமகன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து முதலமைச்சர் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். அவரது அமைச்சரவையில் லாலு பிரசாத் யாதவின் மகன்களான தேஜஸ்வி யாதவ் மாநில துணை முதலமைச்சராகவும், தேஜ் பிரதாப் அமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வனத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் தேஜ் பிரதாப் தலைமையில் பீகார் தலைநகர் பாட்னாவில் அரசு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த பதவியும் வகிக்காத லாலு பிரசாத் யாவின் மருமகன் சைலேஷ் குமார் கலந்துக் கொண்டார். இது பெரும் சர்ச்சையானது. அரசுப் பொறுப்பில் எதுவும் இல்லாத சூழ்நிலையில், துறை ரீதியான முக்கிய கூட்டத்தில் அவர் பங்கேற்றதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.