இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஐந்து கட்ட மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில் ஆறாம் கட்ட தேர்தல் மே -12 ஆம் தேதியும் , கடைசிக்கட்ட தேர்தல் மே-19 ஆம் தேதியும் நடைப்பெறவுள்ளது. இதனால் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநிலக் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இமாச்சல பிரதேச மாநிலத்தில் நான்கு மக்களவை தொகுதிகளில் மே-19 ஆம் தேதி தேர்தல் நடைப்பெறுகிறது. இதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்காக இமாச்சல் பிரதேசம் மாநிலத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சிறிய கோளாறு ஏற்பட்டது. அதனால் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய ஹெலிகாப்டர் குழுவினர் ஈடுபட்டனர். இவர்களுடன் ராகுல் காந்தியும் இணைந்து சரி செய்துள்ளார். இதற்கான புகைப்படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் பலரும் ராகுலின் செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் ராகுல் குழுவினருடன் இணைந்து செயல்படுவது அனைத்து கைகளும் இணைந்து செயல்படுவது தான் என தெரிவித்துள்ளார். அதே சமயம் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் போதே கோளாறு ஏற்பட்டது எனவும் , அது சிறிய பிரச்சனை தான் எனவும் , அந்த கோளாறை நாங்கள் சரி செய்து விட்டோம் என ராகுல் தெரிவித்துள்ளார்.