Published on 12/09/2022 | Edited on 12/09/2022
![The priest who tied up the boy and attacked him... Viral video!](http://image.nakkheeran.in/cdn/farfuture/_bijbuUE0TjZh1SqnmdBjlbtKatmwxWvEigRN04ajLw/1662992999/sites/default/files/inline-images/n1054.jpg)
சிறுவன் ஒருவனை கோவில் பூசாரி கட்டிவைத்து தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஜெயின் கோவில் ஒன்றின் வாசலில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனை அக்கோவிலின் பூசாரி ராகேஷ் ஜெயின் துரத்தி பிடித்துள்ளார். அப்பொழுது சம்பந்தபட்ட சிறுவன் கோவிலுக்கு பக்தர்கள் கொடுத்த முந்திரி பருப்பை திருடி சாப்பிட்டதாக கூறி சிறுவனை அங்கிருந்த கயிற்றால் கட்டிப்போட்டு தாக்கினார். சம்பந்தப்பட்ட சிறுவன் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் எனக்கூறப்படும் நிலையில் சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கோவில் பூசாரி ராகேஷ் ஜெயினை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவனின் உடலில் காயங்கள் இருந்த நிலையில் பட்டியலின வன்கொடுமை சட்டத்தின் கீழ் பூசாரி ராகேஷ் ஜெயின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.