கடந்த 8 வருடங்களாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது குடும்ப சொத்துக்களின் கணக்குகளை வெளியுலகிற்கு வெளியிட்டு வருகிறார். அதன்படி, சந்திரபாபு குடும்பத்தின் சொத்து விவரங்களை நேற்று மாலை அவரது மகனனும், மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் வெளியிட்டார்.
தேசிய அளவில் அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. இந்த சங்கம் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு தான். அவரது சொத்து மதிப்பு ரூ.177 கோடி என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், நேற்று வெளியான அறிக்கையில் ஒரு புதிதா தகவல் வெளியாகியுள்ளது. அதில் சந்திரபாபுவின் மொத்த குடும்ப சொத்து ரூ. 81.63 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சந்திரபாபுவின் சொத்து ரூ. 3 கோடி என்றும், ஆனால் அவரது மூன்று வயது பேரனின் சொத்து மதிப்பு ரூ. 18.71 கோடி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி பார்க்கையில் தாத்தா சொத்து மதிப்பைவிட பேரனின் சொத்து மதிப்பு மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரபாபுவின் மனைவியின் சொத்து ரூ. 31 கோடி, மகன் நாரா லோகோஷின் சொத்து ரூ.21.40 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.