Skip to main content

மாநிலங்களுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கும் ஓபிசி சட்டத் திருத்த மசோதா - நாடாளுமன்றத்தில் தாக்கல்!

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

parliament

 

மராத்தா இடஒதுக்கீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு செய்த சட்டத் திருத்தத்தின்படி, ஓபிசி பட்டியலில் சாதிகளை இணைக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இல்லை எனத் தெரிவித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இருப்பினும் உச்சநீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

 

இதனையடுத்து மத்திய அரசு, ஓபிசி பட்டியலில் சாதிகளை இணைக்கும் அதிகாரத்தை மீண்டும் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை உருவாக்கி, அதை இன்று மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது.

 

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பல்வேறு சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வரும் நிலையில், இந்த ஓபிசி சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

 

சார்ந்த செய்திகள்