ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, மத்திய அரசால் கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நீக்கப்பட்டது. இந்த சட்டப்பிரிவு நீக்கத்தை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரின் பல அரசியல் தலைவர்கள், தடுப்பு காவலிலும், வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் இதுதொடர்பாக இன்று (03.02.2021) மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஜம்மு - காஷ்மீரில் யாரும் வீட்டுக் காவலில் இல்லை என காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியிலிருந்து, ஜம்மு - காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதிகள்,, கல்லெறிபவர்கள் என 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 430 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.