Skip to main content

நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனர் கைது!

Published on 03/10/2023 | Edited on 04/10/2023

 

News Click internet media founder INCIDENT

 

நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனர் டெல்லி போலீசரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த சோதனையின் போது பத்திரிகையாளர்களிடம் இருந்து மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு இன்று மாலை டெல்லி போலீசார் சீல் வைத்திருந்தனர். இந்நிலையில் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை டெல்லி போலீசார் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ( உபா சட்டம் - UAPA) கைது செய்துள்ளனர்.

 

சீனாவுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கம் என்பவரிடம் இருந்து பணம் பெற்றதாக புகார் எழுந்ததால் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் கீழ் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே நியூஸ் க்ளிக் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்