Published on 23/01/2020 | Edited on 23/01/2020
ராஜஸ்தானில் பிறந்த குழந்தை ஒன்றிற்கு அவரின் தந்தை காங்கிரஸ் என்று பெயர் வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயின். ராஜஸ்தான் அரசின் ஊடக பிரிவில் வேலை பார்த்துவரும் இவர் தீவிர காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருக்கு சில மாதங்கள் முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
அந்த குழந்தைக்கு அவர் காங்கிரஸ் என்று பெயர் வைக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் குடும்பத்தில் உள்ளவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். இந்நிலையில் அவர்களை அனைவரையும் சமாதனம் செய்யும் முயற்சியில் ஜெயின் சில மாதங்களாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அந்த குழந்தைக்கு காங்கிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டு அந்த பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் பெயர் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகின்றது.