மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதனால் ஒவ்வொரு கட்சியும் தங்களின் பிரச்சாரங்களை பல்வேறு துறைகளின் வழியாக செய்து வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளம் என்பது தங்களின் பிரச்சாரங்களை எளிதாக மக்களிடையே கொண்டு செல்லும் சிறந்த ஒன்றாக இருக்கிறது.
--LINKS CODE------
இந்நிலையில், ‘மெயின் பி சவுக்கிதார் ஹூன்’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பாஜக சார்பில் வீடியோ வெளியானது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மார்ச் 16ஆம் தேதியே தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் விளம்பரங்களில் இரானுவ வீரர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அதை மீறியும் பல கட்சிகள் இரானுவ வீரர்களின் புகைப்படங்களை வைத்து தேர்தல் அரசியல் செய்த வண்ணம்தான் இருக்கின்றன.
மெயின் பி சவுக்கிதார் ஹூன் விளம்பரத்தில் ராணுவ வீரர்களின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதை பாஜக தேசிய தேர்தல் கமிட்டி உறுப்பினர் நீரஜ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் புகார் எழுந்ததை அடுத்து பாஜக தேசிய தேர்தல் கமிட்டி உறுப்பினர் நீரஜ் மூன்று நாட்களில் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளிக்கும்படி நேற்று நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.