ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் பல உதவிகள் செய்து வருகின்றனர். நாடு முழுவதிலுமிருந்து அந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு உதவிகள் தொடர்ந்து வந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் பிஹார் மாநிலத்தில் இருந்து கான்ஸ்டபிள் சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் ரத்தன் குமார் தாகூர் ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த அந்த இரு வீரர்களின் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவும் வகையில் அம்மாநிலத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி இனாயத் கான் அக்குடும்பத்தினருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.
உயிரிழந்த வீரர்களின் இரு குழந்தைகள் பேரிலும் புதிய வங்கி கணக்கு தொடங்கப்பட உள்ளதாகவும், அதில் மக்கள் தங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம் என தெரிவித்துள்ளார். மேலும் தனிப்பட்ட வகையில், வீரர் ஒருவரின் மகளுடைய கல்விச் செலவையும், அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான செலவையும் ஏற்றுக் கொள்கிறேன் என இனாயத் கான் தெரிவித்துள்ளார். இது அக்குடும்பத்தின் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியேய ஏற்படுத்தியுள்ளது.