Skip to main content

பீகாரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

bihar assembly election thied phase peoples voting

 

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 78 சட்டப்பேரவை தொகுதிகளில் தொடங்கியது.

 

15 மாவட்டங்களில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 1,204 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் மாலை 04.00 மணியுடன் நிறைவு பெறுகிறது.

 

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 10- ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்