Published on 03/05/2019 | Edited on 03/05/2019
வங்க கடலில் உருவான ஃபானி புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஷா நோக்கி நகர்ந்து கோபால்பூர் மற்றும் புரி தெற்கே உள்ள சந்த்பாலி இடையே இன்று காலை புயல் கரையை கடந்தது. ஃபானி புயலால் ஒடிஷா மாநிலம் புரியில் 142 கிமீ முதல் 174 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.
கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கடந்ததில்லை. மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிசாவில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்வசதிகள் வர இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புவனேஸ்வர் ரைம்ஸ் மருத்துவமனை விடுதியின் பெரிய மேற்கூரை மொத்தமாக அடித்து செல்லப்பட்டது.
ஒடிசாவில் ஃபானி புயல் கோரத் தாண்டவம் - புவனேஸ்வர் எயிம்ஸ் விடுதியில் பறக்கும் மேற்கூரை pic.twitter.com/yDTm3uJErA
— BBC News Tamil (@bbctamil) May 3, 2019