Skip to main content

அசாம் படகு விபத்து: 87 பேர் மீட்பு - 3 அதிகாரிகள் இடைநீக்கம்!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

assam boat

 

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் மாவட்டத்தில், பிரம்மபுத்திரா நதியில் நேற்று (08.09.2021) இரண்டு படகுகள் நேருக்கு நேராக மோதி கவிழ்ந்தன. இந்த விபத்தில் 90க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதனையடுத்து நடைபெற்றுவரும் மீட்புப் பணியில் கிட்டத்தட்ட 87 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்; ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

மேலும், 7 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே தேசிய மற்றும் அசாம் மாநில பேரிடர் மீட்புப்படை இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்திய இராணுவமும் இந்த மீட்புப்பணிகளில் இன்று களமிறங்கவுள்ளது. அசாம் முதல்வர் இன்று விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடவுள்ளார்.

 

இதற்கிடையே அசாமின் உள்நாட்டு நீர் போக்குவரத்து துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் பணியில் அலட்சியமாக இருந்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்