Skip to main content

சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்!

Published on 11/02/2019 | Edited on 11/02/2019
kejriwal


ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.   
 

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று காலை 8 மணி அளவில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். 
 

அப்போது பேசிய சந்திரபாபு,  “மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த இன்று நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். ஆனால், நேற்று பிரதமர் ஆந்திராவின் குண்டூருக்கு வந்திருந்தார். அதற்கு என்ன தேவை இருக்கிறது. நீங்கள் எங்கள் தேவைகளை நிறைவேற்றவில்லை என்றால் அதை எப்படி நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். இது ஆந்திர மக்களின் சுய மரியாதை. எங்களுடைய சுய மரியாதையை தாக்கினால், அதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த மத்திய அரசை எச்சரிக்கிறோம், குறிப்பாக பிரதமர் தனிப்பிட்ட ஒருவர் மீது தாக்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.
 

இந்த உண்ணாவிரத  போராட்டத்தில் ராகுல்காந்தியும் பங்கேற்றார். மேலும் தற்போது டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரியன் ஆகியோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

என்.டி.ஏ.வில் இணைய ஆர்வம் காட்டும் இரு பிரதான கட்சிகள்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Jagan Mohan Reddy, Chandrababu Naidu interested in joining BJP

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் படுதீவிரமாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தன. 

ஆனால், இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த நிதிஷ்குமார் கருத்து வேறுபாடு காரணமாக இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் இணைந்துள்ளார். அத்தோடு, பீகார் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த மகா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் சேர்ந்து மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்தியா கூட்டணி போலவே என்.டி.ஏ என்ற பெயரில் பாஜக மற்றுமொரு கூட்டணியை உருவாக்கியுள்ளது. கடந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்த நிலையில் இந்த முறை கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவிற்கு அடுத்த பெரிய கட்சியாக அதிமுக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, தேர்தல் கருத்துக்கணிப்புக்களை தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வரும் நிலையில், அதில் அனைத்திலும் இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக வலுவாக இல்லாத மாநிலங்களில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடியை கொடுக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அந்த வகையில், ஆந்திர மாநிலத்திலும் என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்த பாஜக முயன்றுவருகிறது. அதனடிப்படையில், தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயு டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கெனவே மத்திய அரசுடன் இணக்கமான உறவை வைத்துள்ள நிலையில் தற்போது பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும், எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியும் அடுத்தடுத்து பிரதமரை சந்தித்துள்ளது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்பு ஒரு மாநிலத்தின் இரு பிரதான கட்சிகளும் ஒரே அணியில் இடம்பெறுவதற்காக மாறி மாறி பிரதமரை சந்திக்கின்றனர் என்றும் அரசியல் திறனாய்வாளர்கள் கூறிவருகின்றனர். 

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Arvind Kejriwal's aide's house raided by the enforcement department

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமார் வீட்டிலும், ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான குப்தா வீட்டிலும் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் என 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று (06.05.2024) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.