Published on 20/12/2018 | Edited on 20/12/2018
ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான உபரி தொகை பிரச்சனை சமீபகாலமாக அதிகமாக பேசப்பட்டுவரும் நிலையில் அதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி “ரிசர்வ் வங்கியின் இருப்பில் ஒரு பகுதி பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனமாகக் கொடுக்கவும், ஏழை மக்களின் நலவாழ்வுக்காகவும் பயன்படுத்தப்படும். மாறாக, அரசு அதை எடுத்து அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப் பயன்படுத்துவதில்லை. இந்த அரசு சிறப்பாக நிதிநிலையை நிர்வகித்து வருகிறது. இந்த நிதி ஆண்டிலும் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை இலக்குக்குள் கொண்டுவருவோம். நிதிநிலை பற்றாக்குறையைச் சரிசெய்ய ரிசர்வ் வங்கியின் கையிருப்பு தேவைப்படாது” என்று கூறியுள்ளார்.