கடந்த ஆண்டைவிட, நடப்பு நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 18 மாதங்களில் மாநிலங்களின் வருவாய் இழப்பு பெருமளவு குறைந்திருக்கிறது. இலக்கை எட்டாத மாநிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீடு, முதல் ஆண்டைவிட இரண்டாவது ஆண்டில் குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் வருவாய் அதிகரித்துள்ளதால், ஜிஎஸ்டியின் கீழ் உள்ள விகிதங்கள் குறைக்கப்பட்டு, பெரும்பாலான பொருட்களின் வரி குறைக்கப்பட்டது.
ஒரு பொறுப்பற்ற அரசியல் பொருளாதாரத்தை ஒரு இனத்தின் கீழே வைத்து இருந்தது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்திய பிறகு முற்றிலும் நிலைமை மாறிவிட்டது. அனைத்து வரிகளையும் ஒன்றிணைத்து இந்தியா முழுவதும் ஒரு நாடு ஒரு வரி என்று கொண்டுவரப்பட்டது.
31 சதவீதம் மறைமுக வரிகள் மூலம் நாட்டை ஒடுக்கி வந்தது காங்கிரஸ் அரசு, அதனை பாஜக அரசு ஜிஎஸ்டி வரி மூலம் 28 சதவீதமாக குறைத்தது. ஜிஎஸ்டி வருவாயை பொறுத்தவரையில் 2017ஆம் ஆண்டில், சராசரி வரி வருவாய் ஒரு மாதத்துக்கு 89 ஆயிரத்து 700 கோடி ரூபாயாக இருந்ததாகவும், நடப்பாண்டில் இது 97 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.