Skip to main content

”யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகாலாம்”-கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி

Published on 25/08/2018 | Edited on 25/08/2018

 

கர்நாடகா, ஹசன் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, தான் மீண்டும் முதலமைச்சராவதை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  தடுப்பதாக கூறியுள்ளார்.

kumarasamy

 

முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் வெற்றிபெற்றும் முதலமைச்சர் ஆகாமல் போனது துரதிர்ஷ்ட வசம் என்று கூறியவர், பின் மக்களின் ஆசி இருந்தால் தான் மீண்டும் முதலமைச்சராவேன் என்று சித்தராமைய்யா தெரிவித்திருந்தார்.

 

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அமைந்திருக்கிறது. குமாரசாமி முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். என்னதான் கூட்டணியில் இந்த இரு கட்சியும் இருந்தாலும், பல மனஸ்தாபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல, தற்போது சித்தராமைய்யா இவ்வாறு பேசியிருப்பது அனைவரையும் மீண்டும் சந்தேகிக்க வைக்கிறது.  

 

இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்ததாவது: ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் என்றார்.    

  

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ் சினிமாவில் எனக்கு சப்போர்ட் செய்ய யாரும் இல்லை, இருந்திருந்தால்”- குட்டி ராதிகா வருத்தம்!

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

கடந்த 2003ஆம் ஆண்டு எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் வெளியான படம் இயற்கை. இப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கன்னட நடிகை குட்டி ராதிகா. அதன் பிறகு சில படங்களில் நடித்தவர் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
 

kutty radhika

 

 

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி. குமாரசாமியை திருமணம் செய்துகொண்டார். பல ஆண்டுகள் சினிமா பக்கம் வராத குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
 

zombi


ஹீரோயினை மையப்படுத்தும் கதை அம்சம் கொண்ட தமயந்தி என்ற படத்தில் இவர் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுகு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகிறது. மலையாளம், ஹிந்தியில் டப் செய்து வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. நவரசன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். 
 

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “கன்னட சினிமாவில் நுழையும்போது என்னுடைய வயது 14. சப்போர்ட் பண்ண யாருமே இல்லை. சினிமாவில் என்ன மாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுக்கணும்னு என் குடும்பத்துக்கும் தெரியாது. எனக்கும் சின்ன வயது. கதைகூட கேட்காம எல்லா படத்துலயும் நடிப்பேன். 
 

mahamuni


தமிழ் சினிமாவுல ‘இயற்கை’ திரைப்படத்துல நடிக்கும்போது 15 வயதுதான். முதல் படமே தேசியவிருது வாங்கினது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ‘இயற்கை’ படத்தோட படப்பிடிப்புலதான் தமிழையே கத்துக்கிட்டேன். ஆனா அந்தச் சமயத்துல எனக்குப் படங்கள்ல நடிக்கிறது சம்பந்தமா கால்ஷீட் கொடுக்கறதுக்கும், கோலிவுட்டில் வழிகாட்டவும் யாருமே இல்லை. உண்மையைச் சொல்லணும்னா எனக்குத் தமிழ் சினிமாவில் நல்ல காட்பாதர் கிடைச்சிருந்தா கோலிவுட்டிலேயே செட்டில் ஆகிருப்பேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

Next Story

குமாரசாமிக்கு மீண்டும் கெடு விதித்த ஆளுநர்... 

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று (18/07/2019) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல், அவையில் ஏற்பட்ட தொடர் அமளியால் துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி அவையை இன்று (19/07/2019) காலை 11.00 மணிக்கு ஒத்திவைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவின் மாநில தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தும் வரை சட்டப்பேரவையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறினார்.
 

kumarasamy

 

 

அதனைத் தொடர்ந்து எடியூரப்பா தலைமையிலான பாஜக எம்.எல்.ஏக்கள், இரவு உணவை சட்டப்பேரவை வளாகத்தில் அருந்தி, அங்கேயே உறங்கினர். சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் உறங்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.ஏற்கனவே ஆளுநர் வஜூபாய் வாலா நேற்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவுரை வழங்கிய நிலையில், ஆளுநர் உத்தரவை சபாநாயகர் ஏற்காததால், ஆளுநர் மீண்டும் முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
 

அந்த கடிதத்தில் இன்று (19/07/2019) மதியம் 01.30 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு கெடு விதித்துள்ளார்.
 

இந்நிலையில் ஆளுநரின் வலியுறுத்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி மனு அளித்துள்ளார். 
 

காலை 11 மணியளவில் சட்டசபை தொடங்கிய நிலையில் குமாரசாமி பேச தொடங்கினார். தற்போது ஆளுநர் கொடுத்த கால கெடுவும் முடிந்த நிலையில் விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பேசுகையில், “ தற்போதும் விவாதம் முடியவில்லை. மேலும் 20 உறுப்பினர்கள் விவாதத்தில் பேச காத்திருக்கிறார்கள். அதனால் இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது. திங்கள்கிழமை வரை இந்த விவாதம் தொடரும்” என்று கூறினார். எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பேசியபின் தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
 

இந்நிலையில் கர்நாடக ஆளுநர் மீண்டும் குமாரசாமிக்கு கெடு விதித்துள்ளார். இன்று மாலை ஆறு மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.