உலகம் முழுவதும் கடுமை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் கேரளாவில் மேலுமொரு நபருக்கு பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவியுள்ளது. சுமார் 14,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில் 350 க்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து சீனாவில் இருந்து இந்தியா வந்த கேரள மாநிலதவர் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு இருந்ததையடுத்து, அவரும் ஆழப்புலா மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது காசர்கோடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டம் காங்கநாடு பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் சீனாவின் வுஹான் நகரில் மருத்துவம் படித்து வருகிறார். இந்தியா வந்திருக்கும் அவருக்கு தற்போது கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.