Skip to main content

ஆந்திராவின் அடுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியா?

Published on 20/05/2019 | Edited on 20/05/2019


இந்தியாவில் நடந்த மக்களவை தேர்தலுடன் , ஆந்திரா, ஒடிஷா போன்ற சில மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைப்பெற்றது. இதற்கான அனைத்து கட்ட தேர்தல்களும் நேற்று முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது. "இந்தியா டுடே செய்தி நிறுவனம்" வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆந்திர மாநிலத்தில் மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 130-135 சட்டமன்ற தொகுதிகளையும், ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுக்கு சுமார் 37-40 இடங்களே கிடைக்கும் எனவும், மற்ற கட்சிகள் - 1 இடத்தை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பால் உற்சாகத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உள்ளனர்.

 

 

YSR

 

அதே போல் ஆந்திர மாநிலத்தில் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக முதன் முறையாக அரியணை ஏறுவாறா? என்பதை மே-23 ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை முடிவுக்கு பின் தெரியவரும். அதே போல் ஆந்திர மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலிலும் ஜெகன்மோகன் முன்னிலை வகிப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளதால் அதிர்ச்சியில் தெலுங்கு கட்சி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்