Published on 28/08/2019 | Edited on 28/08/2019
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தங்கியிருந்த அரசு பங்களாவிற்கு குடியேறியுள்ளார் அமித் ஷா.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், டெல்லியில் உள்ள கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு வாஜ்பாய் மறைந்த பிறகு அந்த பங்களா காலியாகவே இருந்தது. இந்த நிலையில் தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியேறியுள்ளார். முன்னதாக அக்பர் சாலையில் உள்ள பங்களாவில் அமித்ஷா தங்கியிருந்தார். தற்போது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு பிறகு, வாஜ்பாய் வசித்துவந்த இல்லமும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.