Skip to main content

அடித்துக் கொல்வதற்கே கண்டுபிடித்தது ஜெய் ஸ்ரீராம் கோஷம் – நோபல் விருதுபெற்ற அமார்த்தியா சென் காட்டம்!

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லாவிட்டால் அடித்துக் கொல்வதை பொருளாதார அறிஞர் அமார்த்தியா சென் கடுமையாக கண்டித்துள்ளார்.
 

amartiya sen



மேற்கு வங்கத்தில் வசிப்போர் துர்கா தேவியை வணங்குவதையே தங்கள் கலாச்சாரமாக கொண்டிருக்கிறார்கள். ஜெய் ஸ்ரீராம் கோஷம் மேற்கு வங்க கலாச்சாரத்துக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாதது ஆகும் என்று அவர் கூறியிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பேசிய அவர் கூறியது…

“சமீபத்தில் ராம் நவமி பூஜை பிரபலமாகி வருகிறது. இதற்கு முன் எப்போதும் இதை கேள்விப்பட்டதில்லை. எனது நான்கு வயது பேரக்குழந்தையிடம் உனக்கு பிடித்த கடவுள் யார் என்று கேட்டேன். அந்தக் குழந்தை துர்காதேவி என்று பதில் கூறியது. அந்த அளவுக்கு துர்காதேவி எங்கள் வாழ்க்கையில் கலந்தவர். ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை மக்களை அடித்துக் கொல்வதற்காகவே கண்டுபிடித்துள்ளார்களோ என்றே நான் நினைக்கிறேன். வறுமை ஒழிப்பு என்பது ஏழை மக்களின் வருமானத்தை அதிகரிப்பதால் மட்டும் ஒழிந்துவிடாது. அடிப்படை சுகாதார வசதியையும், முறையான கல்வியையும், சமூக பாதுகாப்பையும் ஏழைகளுக்கு அளிக்கும்போதுதான் வறுமை ஒழியும்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்