தலைநகரில் ஆம்ஆத்மி-யிடம் பலத்த அடி வாங்கிய பாஜக!
டெல்லியில் நடைபெற்ற சட்ட பேரவை தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பாவனா தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வெட் பிரகாஷ் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். இதன் காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
டெல்லி சட்டமன்றத்தில் இருக்க கூடிய 12 தனி தொகுதியில் பாவனா தொகுதியும் ஒன்றாகும். அதிக வாக்காளர்கள் (3 லட்சம்) கொண்ட தொகுதியில் இதுவும் ஒன்றாகும். இடைத்தேர்தலில் மொத்தம் 45% வாக்குகள் பதிவாகியிருந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது. இதில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ராம் சந்தர் 59,886 வாக்குகளும், பாஜகவின் சார்பில் போட்டியிட்ட வெட் பிரகாஷ் 35,834 ஓட்டுகளும், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சுரேந்தர் குமார் 31,919 வாக்குகள் பெற்று இருக்கின்றனர்.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆதிகாரத்தை பயன்படுத்தி பாஜக நுழைந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது தலைநகரிலேயே பாஜக வீழ்த்தப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் அதிகாரத்தை அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ந்து ஆம் ஆத்மி அரசுக்கு குடைச்சல் கொண்டு வந்த நிலையிலும் 24 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஓட்டில் வெற்றி மீண்டும் தங்களில் பலத்தை மீண்டும் ஆம் ஆதமி நிரூபித்து இருக்கிறது.
70 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் தற்போது ஆம் ஆத்மி 66 உறுப்பினர்களும், 4 பாஜக உறுப்பினர்களும் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இந்த இடைத்தேர்தலின்போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் முறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு மேற்கு வங்க மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
சி.ஜீவா பாரதி