Skip to main content

காங்கிரஸ் கட்சியின் திட்டம்... புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள்...

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு ஜனவரி 10 முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. இந்நிலையில், இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

aam aadmi will not attend today congress meeting

 

 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த போராட்டத்தை வெளிப்படுத்த நினைத்த காங்கிரஸ் கட்சி, இதுகுறித்த ஆலோசிக்க கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் கட்சிகள் அனைத்திற்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.

இந்த கூட்டம் இன்று நடக்கும் நிலையில், பல முக்கிய கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.   காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதி அறிவித்த நிலையில், தற்போது ஆம் ஆத்மீ கட்சியும் பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் முக்கிய கட்சிகளான இவை, ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளாதது போராட்டங்களை வலுவிழக்க செய்யலாம் என்று கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்