தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்திருக்கும் பாஜக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் 9.35 லட்சம் கோடி முதலீட்டில் இந்திய பாதுகாப்பு துறையில் பல புதிய மாற்றங்களை கொண்டு வர முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி, இந்த நிதியிலிருந்து தரைப்படைக்காக 2 ஆயிரத்து 600 போர் வாகனங்களை கொள்முதல் செய்யவும், விமானப் படைக்கு 110 அதிநவீன போர் விமானங்களை கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் வகையில், பாதுகாப்பு துறையில் செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்தல், முக்கியமான நகரங்களில் ராணுவ தளம் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்ம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டிலேயே இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதற்காக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.