Published on 11/06/2019 | Edited on 11/06/2019
சத்திஷ்கர் மாநிலத்துக்கு மாம்பழம் ஏற்றி வந்த டிரக்கினுள் ரூ.70 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தி வரப்பட்டிருந்தது, குரங்குகளால் கண்டுபிடிக்கப்பட்டது. டிரக் ஒன்றில் மாம்பழம் ஏற்றப்பட்டு சத்திஷ்கர் மாநிலத்துக்கு சென்றது. சத்திஷ்கர் மாநிலத்தின் ஹெல்காபானி என்ற வனப்பகுதியில் டிரக் இரவு வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரக் பழுதானது.இந்த நிலையில் மாம்பழத்தினை கண்ட ஏராளமான குரங்குகள் டிரக்கினுள் புகுந்து மாம்பழத்தை சாப்பிட ஆரம்பித்துவிட்டன.
அதை தடுக்க முயன்ற டிரக் டிரைவரை குரங்குகள் கடிக்க வந்ததால் அங்கிருந்து டிரைவர் ஓடிவிட்டார்.குரங்குகளின் சேட்டை தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த காவல் துறையினர் குரங்குகளை விரட்டி விட்டு அந்த டிரக்கை சோதனை செய்தனர்.அப்போது அந்த டிரக்கில் 70இலட்சம் மதிப்புள்ள 800கிலோ கஞ்சா அந்த வண்டியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அந்த அந்த வண்டி எங்கு இருந்து வந்தது யார் டிரைவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.