Skip to main content

50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்; நீரில் தத்தளிக்கும் கேரளா;29 பேர் உயிரிழப்பு!

Published on 11/08/2018 | Edited on 11/08/2018

 

கேரளாவில் கடந்த புதன்கிழமை முதல் பெய்துவரும் கன மழையினால் கேரளாவில் வயநாடு, கண்ணூர், ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்கள்  வெள்ளத்தில் மிதக்கின்றன. 50 ஆண்டுளில் இல்லாத கனமழை மற்றும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

  

KERALA

 

 

 

வெள்ளநீர் வெளியே செல்ல வழியில்லாததால் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தன்னூரில் மழை வெள்ளத்தால் வீடுக்கள் அடித்து செல்லப்பட்டன. காற்றாற்று வெள்ளத்தில் மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்படுகிறது. எர்ணாகுளம் முதல் இடுக்கிவரை சுமார் 200-க்கு மேற்பட்ட மீட்புப்பணி குழுவினர் குவிந்துள்ளனர். கேரளாவின் மலை பிரதேச பகுதிகளுக்கு மக்கள் சுற்றுலா செல்லவேண்டாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.   

 

KERALA

 

 

 

கொச்சி விமானநிலையத்தில் வெள்ள அபாயம் இல்லை என்பதால் விமான சேவை தொடங்கியது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை மீட்புக்குழுவினர் படகுமூலம் மீட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலமும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலமாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவியும் செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரளாவில் தொடர் கனமழையினால் இதுவரை 29 பேர் உயிரிலிந்துள்ளனர்.

 

KERALA

 

 

 

கர்நாடக முதல்வர் குமாரசாமி கேரள முதல்வர் பினாரயி விஜயனை  தொடர்புகொண்டு வெள்ள பாதிப்பு பற்றி கேட்டதாகவும் கேரள வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக 10 கோடி தரவிருப்பதாகவும் உறுதியளித்துள்ளார். வெள்ளபாதிப்பால் கேரளாவில் அரசு விழாக்கள் ஒத்திவைக்கப்பட்டது. இன்று தற்போது கேரளாவை சூழ்ந்துள்ள வெள்ள சேதப்பகுதிகளை முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் பினராயி விஜயன்  ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். 

சார்ந்த செய்திகள்