உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவி ஏற்கிறார்.
2014ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் 6 ம் தேதி நாட்டின் 48 ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் நாட்டின் 49வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பொறுப்பேற்கிறார். பதவி மூப்பின் அடிப்படையில் தலைமை நீதிபதி பரிந்துரை செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் நீதிபதி என்.வி.ரமணா யு.யு.லலித்தை அடுத்த நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார். இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பொறுப்பேற்பார். அவருக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்துவைப்பார்.
யு.யு.லலித் நவம்பர் 8ம் தேதி வரை மட்டுமே செயல்படுவர். அதன் பின் அவர் ஓய்வு பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.