கடலுக்குள் சென்ற படகு கவிழ்ந்து 4 மாணவர்கள் உயிரிழப்பு!
மகாராஷ்டிர மாநிலத்தில் 40 பள்ளி குழந்தைகளுடன் கடலுக்குள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் தஹானு பகுதியில், பர்னகா கடற்கரையில் இருந்து பள்ளி மாணவர்கள் 40 பேருடன் கடலுக்குள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த மாணவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையின் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணியின்போது 4 மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டதாகவும், 32 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிகிறது. மீதமுள்ள மாணவர்களை மீட்கும் பணியில் மீட்புகுழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தஹானு கடற்கரையில் இருந்து 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் காலை 11.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.