![23 lakh looted by breaking ATM in broad daylight; Police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/TLr5uog5En0BNiVyhB8bQ3b7W1SiTMTsITHbuTnia14/1690719509/sites/default/files/inline-images/a869.jpg)
பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் 23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டப்பகலில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவின் மீது கருப்பு நிற ஸ்ப்ரேவை அடித்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை நடந்தது தொடர்பாக நெடுஞ்சாலை வழியாக சென்ற மக்கள் போலீசில் புகாரளித்த நிலையில் ஏடிஎம் மையத்திற்கு வந்த போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கேஸ் கட்டர் மூலம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. பட்டப்பகலில் ஏடிஎம் மையத்தில் 23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.