ஆந்திர மாநிலத்தின் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சோதனை முறையில் சிகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டத்தில் கடந்த மாதம் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகள் திறந்த 2 நாட்களில் 27 பேருக்கு காரோனா தொற்று ஏற்பட்டதால் உடனடியாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் நவம்பர் 2 முதல் மீண்டும் திறக்கப்பட்டது. இந்தச் சூழலில், சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை அந்தந்த மாநில அரசுகள் திறந்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்த சூழலில், ஆந்திர அரசு சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல் பள்ளிகளைத் திறந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், தற்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநில அரசு மீது விமர்சனங்களை அதிகரித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் சித்தூரில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள அம்மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா உத்தரவிட்டுள்ளார்.