அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் கணிதப் பேராசிரியையான நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காக 4 மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதால், நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்ற தகவல் பரவியது. அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கண்டனக் குரல்கள் எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நிர்மலா தேவியின் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து புதிய தகவல் வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி முதல் 29ம் தேதி வரை பேராசிரியை நிர்மலா தேவியை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு புத்தாக்க பயிற்சிக்கு அனுப்பியது தேவாங்கர் கல்லூரி நிர்வாகம். ஆனால்,நிர்வாக காரணங்களால் 20ம் தேதி அன்றே நிர்மால தேவிக்கு அளித்த அனுமதியை ரத்து செய்து கல்லூரிக்கு திரும்பி வர தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் கடிதம் எழுதியது.
இந்த கடிதத்தை அடுத்து, புத்தாக்க பயிற்சிக்கு சென்ற நிர்மலா தேவியை திரும்ப அனுப்ப மதுரை காமராசர் பல்கலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பி அனுப்ப பல்கலைக்கழகம் மறுத்த நிலையில் மார்ச் மாதம் 21ம் தேதி அன்றே நிர்மலா தேவியை சஸ்பெண்ட் செய்தது தேவாங்கர் கல்லூரி என்ற புதிய தகவல் வந்துள்ளது.