Published on 05/06/2018 | Edited on 05/06/2018

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பிரதிபா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் பிரதிபா. இவர் கடந்த ஆண்டு நடந்த +2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தார். இவருக்கு சித்தா மருத்துவ படிப்பு கிடைத்தும் கூட அதில் சேராமல் ஒரு வருட காலம் நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு இந்த ஆண்டு தேர்வு எழுதியிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் தோல்வி அடைந்த நிலையில் தற்கொலை செய்திருப்பதாக தகவல். பிரதிபாவின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.