ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இந்தியா உட்பட 205 நாடுகளைச் சேர்ந்த 11,000- க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். கரோனா அச்சம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஒலிம்பிக் தொடக்க விழா அணி வகுப்பில் இந்தியாவின் சார்பில் 19 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிலிருந்து 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்கின்றன. மேரிகோம் (குத்துச்சண்டை), ஹாக்கி கேப்டன் மன்ப்ரீத் சிங் தேசிய கொடியை ஏந்திச் செல்கின்றனர்.
இந்த விழாவில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் இன்று (23/07/2021) முதல் ஆகஸ்ட் 8- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.