ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடி மாவட்டமே பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், தூத்துக்குடி எரிந்துகொண்டிருக்கும்போது போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற அமைச்சர்கள் செல்லவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் செல்லவில்லை. ஆனால், சென்னை ராயப்பேட்டயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கட்சி நிர்வாகி மகளின் பூப்புனித விழா கொண்டாட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, மாஃபா பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சபாநாயகர் தனபால், அதிமுக எம்.பி. மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒரு மாவட்டமே கலவர பூமியாக மாறி பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது தூத்துக்குடிக்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறாமல், பேச்சுவார்த்தை நடத்தாமல் கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கும் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களால் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். அமைச்சர்களின் இந்த நடவடிக்கைக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.