தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 26/03/2019 அன்று நிறைவடைந்தது. இதனையடுத்து வேட்பு மனுதான பரிசீலனை 27/03/2019 தொடங்கியது. இந்நிலையில் வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற இன்று மதியம் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. காலக்கெடு முடிந்ததால் 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம். இதன் படி தமிழகத்தில் மக்களவை தொகுதியில் போட்டியிட சுமார் 1587 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு ஏற்பு : 947
வேட்பு மனு நிராகரிப்பு : 639
தமிழக மக்களவை தொகுதிகளில் அதிகபட்சமாக 60 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி "தென் சென்னை"ஆக உள்ளது. தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மக்களவை தொகுதியில் 25 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். தமிழக 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்காக சுமார் 518 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில்
வேட்பு மனு ஏற்பு : 308.
வேட்பு மனு நிராகரிப்பு : 206.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிகப்பட்சமாக சுமார் 51 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழக வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பான மேலும் விவரங்களுக்கு :
http://ecapp0155.southindia.cloudapp.azure.com/pcnom/pu_nom/public_report.aspx?eid=PY12019 மற்றும் http://www.elections.tn.gov.in/vote/index.aspx சென்று அறிந்து கொள்ளலாம்.
பி .சந்தோஷ் , சேலம் .
Published on 28/03/2019 | Edited on 28/03/2019