Skip to main content

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் - உத்சவ் பெய்ன்ஸ் நேரில் ஆஜராக உத்தரவு

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் வழக்கை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஹிண்டன் நரிமன், தீபக் குப்தா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது.   விசாரணைக்கு பின்னர் இந்த அமர்வு,  வழக்கறிஞர் உத்சவ்பெய்ன்ஸ் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, இது தொடர்பாக அவருக்கு  நோட்டீஸ் அனுப்பியது.   மேலும், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

 

பாலியல் புகாரில் ரஞ்சன் கோகாயை சிக்க வைக்க சதிவேலை நடப்பதாக கூறியிருந்தார் உத்சவ் பெய்ன்ஸ்.  ஆகவே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

ர

 

ரஞ்சன் கோகாய் மீது அவருடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய 35 வயதாகும் பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். 2014ம் ஆண்டு மே மாதம் முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் வரை, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற இளநிலை உதவியாளராக பணியாற்றிய அந்தப்பெண் அக்டோபர் 2016 முதல் அக்டோபர் 2018 வரை இரண்டு ஆண்டுகள் கோகாயின் நீதிமன்ற அறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர்.

 

 உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு, அந்த பெண்  ஒரு பிரமாணப் பத்திரத்தை கடிதமாக அனுப்பினார். ரஞ்சன் கோகாய் வீட்டில் 2018ம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11ம் தேதிகளில் அவர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தகவல் இடம் பெற்றிருந்தது. 

 

அந்த கடிதம் தொடர்பான செய்தி தற்போது சில ஊடகங்களில் வெளியானது. இது தொடர்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு இதை விசாரித்தது.

 


 இது குறித்து நீதிபதி ரஞ்சன் கோகாய், நான் 20 வருட காலமாக நீதித் துறையில் பணியாற்றி வருகிறேன். சுய லாபம் இல்லாத எனது சேவையில், தற்போது என் மீது இப்படி ஒரு புகார் கூறப்பட்டுள்ளது. இது நம்பமுடியாததாக இருக்கிறது. நீதிபதி பொறுப்பில் நான் மிகவும் உண்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது போன்ற பொய்ப் புகார் அடிப்படை ஆதாரமற்றது. இப்படி புகாரை கூறியுள்ளதன் மூலமாக நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்லது. நீதித்துறையின் ஸ்திரத்தன்மையை உடைப்பதற்கு யாரோ பின்னால் இருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையி இந்த  புகார் மீதான இன்றைய விசாரணையில் வழக்கறிஞர் உத்சவ்பெய்ன்க்ஸ் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்