மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கூட்டணி கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
திருப்பூர், நாகப்பட்டினம்(தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது என்று அறிவித்தார்.
ஈரோட்டில் மதிமுக போட்டியிடுகிறது என்றும், பெரம்பலூரில் ஐஜேகே கட்சி போட்டியிடுகிறது என்றும், விழுப்புரம்(தனி) மற்றும் சிதம்பரம்(தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்றும், கொமதேக கட்சி நாமக்கல்லில் போட்டியிடுகிறது என்றும் அறிவித்தார்.
திருவள்ளூர்(தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என்று அறிவித்தார்.
மதுரை, கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டியிடுகிறது என்றும், ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடுகிறது என்றும் அறிவித்தார். திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நீலகிரி, பொள்ளாச்சி, தென்காசி, தஞ்சாவூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது என்றும் அறிவித்தார்.