நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாகக் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் நேற்று உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற கட்சியின் பாராட்டு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மலப்புரம் மாவட்டம் எடவன்னாவில் ராகுல் காந்தி பேரணியாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இரண்டு தொகுதிகளிலும், ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளதால் எந்த தொகுதியை ராஜினாமா செய்யப்போகிறார் என்ற கேள்வி எழும்பியுள்ளது.
கடந்த தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமோதி தொகுதியிலும், வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டநிலையில் அமோதியில் தோல்வியடைந்து வயநாட்டில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். தற்போது மீண்டும் வயநாடு தொகுதியில் நின்று ராகுல்காந்தி வெற்றிபெற்றிருக்கிறார். அதேசமயம், காலம்காலமாக ராகுல் காந்தியின் குடும்பத் தொகுதியாக இருக்கும் ரேபரேலியிலும் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராகுல்காந்தி எந்த தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கப்போகிறார் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.