தான் தமிழன் அல்ல; தெலுங்கன் என்று அப்பாவி இளைஞர்களை சிலர் உசுப்பேற்றி விடுகின்றனர். இந்த பேச்சை நம்பி தன்னை தெலுங்கன் என்று சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு ஒரு கட்சியினர் அவதூறு பரப்புகின்றனர். ஜாதியை கூறி, தன்னை தொடர்ந்து விமர்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மதுரை அருகே பெருங்காமநல்லூரில் நடந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்ததால், தங்களது கட்சி்யை பற்றித்தான் வைகோ பேசுகிறார் என்று புரிந்துகொண்ட நாம் தமிழர் கட்சி்யினர் வைகோவை தாக்க முயன்றனர். மதிமுகவினரும் போலீசாரும் வைகோவை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, ஆண்டிப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’பெருங்காமநல்லூரில் சீமான் ஆதரவாளர்கள் எனக்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் த ள்ளு முள்ளு ஏற்பட்டது. என்னை தெலுங்கன் என குற்றம்சாட்டி மீம்ஸ்களை பரப்பி வருகிறார் சீமான். பிரபாகரன் உயிருடன் இல்லை என நினைத்து அவரது கொடியை சீமான் பயன்படுத்தி வருகிறார்’’என்று ஆவேசத்துடன் கூறினார்.